உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது வெங்கத்துார் ஏரி.பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 360 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியை மணவாளநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் 2021 முதல் பராமரித்து மரக்கன்று மற்றும் பனை விதை நட்டு வருகின்றனர். இதுவரை 4,500 பனை விதைகள் 950 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று நடந்த நீர்நிலை விழிப்புணர்வு பேரணியை மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ துவக்கி வைத்தார்மணவாளநகர் இந்திரா காந்தி சிலை அருகே துவங்கிய பேரணி வெங்கத்துார் ஏரி கரையை அடைந்தது.நிகழ்ச்சியில் மாசுகட்டுப்பாடு வாரியம் உதவி செயற்பொறியாளர் சபரிநாதன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு சார்பில் 500 மரக்கன்றுகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அரசு, தனியார் பள்ளி, சட்டக்கல்லுாரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.தொடர்ந்து மணவாளநகர் குடியிருப்போர் பொதுநலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சுற்றுச்சூழலுக்கு பணி மேற்கொள்ளும் சிறந்த அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை