மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
20 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
20 hour(s) ago
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர, 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்நோயாளிகளாக சுகாதார நிலையத்தில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், சுகாதார நிலைய வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட குரங்குகள் பகல் நேரம் முழுதும் சுற்றித்திரிகின்றன. நோயாளிகள் வரும் வாகனங்கள் மேல் அமர்ந்து, வாகனத்தில் உள்ள உணவு வகைகள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து செல்கின்றன.மேலும், உள்நோயாளிகளுக்கு உறவினர்கள் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் பறித்து செல்கின்றன. இதனால் நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.சுகாதார நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் நோயாளிகள் பலமுறை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மருத்துவ அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட, வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 hour(s) ago
20 hour(s) ago