உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி கைது

வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி.நேற்று முன்தினம் காலை இந்த வங்கி ஏ.டி.எம்.,மில் உள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் இன்ஜினியர் 'சர்வீஸ்' செய்து கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்தவரும் பா.ஜ.., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினருமான அபிலாஷ், 35, என்பவர் பணம் எடுக்க வந்தார். அப்போது அபிலாஷ் பணம் எடுக்க ஏ.டி.எம்., கார்டை மிஷினில் செலுத்தி உள்ளார். அங்கிருந்த வங்கி ஊழியர் 'சர்வீஸ்' செய்வததாகவும், பணம் எடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.அதை மீறி, அபிலாஷ் ஏ.டி.எம்., கார்டை போட்டு உள்ளார். இதை கவனித்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அபிலாஷ் வங்கி உதவி மேலாளரை ஆபாசமாக பேசி அடித்து தாக்கியுள்ளார்.இதுகுறித்து பிரதீப் புகாரின்படி வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், அபிலாஷை கைது செய்தனர். திருவள்ளூர் ஜே.எம்., - 2 நீதிபதி பவித்ரா முன் நேற்று ஆஜர்படுத்தி, சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். அபிலாஷின் தாய் ஜெயந்தி, வெங்கத்துார் ஊராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.வங்கி உதவி மேலாளரை பா.ஜ., பிரமுகர் தாக்கியது தொடர்பான, 'சிசிடிவி' காட்சிகளை வெளியிடக்கூடாது என, காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில், அபிலாஷ், உதவி மேலாளரை தள்ளியுள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டனர். இந்த வீடியோ வங்கி ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்