அலையில் சிக்கி சிறுவன் பலி ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்
எண்ணுார்:வீடியோ 'ரீல்ஸ்' மோகத்தால், கடலில் விளையாடியபடி போஸ் கொடுத்த சிறுவன், அலையில் சிக்கி பலியானார்.எண்ணுார், அன்னை சிவகாமி நகர், 9வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரதீப், 17. பிளஸ் 2 முடித்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, தன் நண்பர்களான நவீன், 16, ஸ்ரீ பிரியன், 17, அருண், 16, ஆகியோருடன், பெரியகுப்பம் கடல் பகுதிக்கு சென்றுள்ளார்.அப்போது, நண்பர்கள் கடலில் குளித்தபடி, ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதில், வீடியோவிற்கு போஸ் கொடுத்த பிரதீப், திடீரென அலையில் சிக்கி துாக்கி வீசப்பட்டதில், பாறாங்கல்லில் மோதி காயமடைந்தார்.மீனவர்கள் பிரதீப்பை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இறந்தது தெரிய வந்தது. இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீஸ் ரோந்துவிடுமுறை தினங்களில், எண்ணுார் - திருவொற்றியூர் கடல் பகுதிகளில், ஆபத்தான வகையில் குளியல் போடுபவர்கள் அலையில் சிக்கி, உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.