உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

பொன்னேரி, பொன்னேரி, திருவாயற்பாடி குளக்கரை தெருவைச் சேர்ந்த சத்தியராஜ், 40. இவரது மகன் நிதின், 8, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று மதியம், வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த தெருநாய் ஒன்று, திடீனெ இவரை விரட்டியது. அப்போது தடுமாறி விழுந்தபோது, தெருநாய் நிதினின் முகம், தோள்பட்டை ஆகிய இடங்களில் கடித்து குதறியது.நிதினின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து, நாயை அங்கிருந்து துரத்தினர். பின், நிதினை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். நீண்டநேரம் அவசர ஊர்திக்காக, காத்திருந்து, அது வராத நிலையில், அவரது உறவினர்கள் புறநகர் ரயிலில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.திருவாயற்பாடி பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், இதில் வெறிபிடித்த நாய்கள் அவ்வப்போது குடியிருப்புவாசிகளை கடித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை