உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மாற்றியை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு

மின்மாற்றியை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த இந்தளூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்டு, சின்னக்கயப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், ஏரி பாசனம் மற்றும் கிணற்று மோட்டார் பாசனத்தின் வாயிலாக, விவசாயம் செய்து வருகின்றனர். இதில், கிராமத்தின் ஒரு பகுதியில், இருபதுக்கும் மேற்பட்ட விவசாய மோட்டார் இணைப்புகளுக்கு மின்சாரம் செல்வதற்காக, மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம், மர்ம நபர்கள் மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்து, மின்மாற்றியை கழற்றி கீழே இறக்கி, அதனை உடைத்து, அதிலிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மற்றும் 60 லிட்டர் ஆயிலை திருடிச் சென்றுள்ளனர்.இதனால், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, மின்வாரியத்துறையினர், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை