உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசையில் குவியும் குப்பை தீ வைத்து எரிப்பதால் அவதி

திருமழிசையில் குவியும் குப்பை தீ வைத்து எரிப்பதால் அவதி

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கி வருகிறது. குப்பையை அகற்றாமல் பல இடங்களில் தீ வைத்து எரித்து வருகின்றனர். குறிப்பாக எல்.டி.எம்., நகர் பகுதியில் குப்பையை அகற்றாமல் தீ வைத்து எரித்து வருகின்றனர். எல்.டி.எம்.நகர் பகுதியில் சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது குப்பை எரித்து வருவது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் புகையால் வாகனங்களில் செல்வோர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !