உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புனித பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு

புனித பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்: புனித பயணம் மேற்கொள்ளும், தமிழகத்தைச் சேர்ந்த புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர், நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த தலா 50 புத்த, சமண மற்றும் 20 சீக்கிய மதத்தினர், இந்தியாவில் உள்ள அவரவர் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள, தமிழக அரசால் ஆண்டுதோறும் தலா, 10,000 ரூபாய் வீதம், 120 பேருக்கு 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நவ., 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 6 00 005' என்ற முகவரியில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ