உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்

கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, கீழ்அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யேசுபாதம் மகன் பாபு, 53, கோவிந்தசாமி மகன் பாபு,36. இருவரும் நேற்று மதியம், லோடு ஆட்டோவில் 'டைல்ஸ்' கொண்டு வருவதற்காக ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, தடுக்குப்பேட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். ஆட்டோ பாபு, 36, என்பவர் ஓட்டிச் சென்றார்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, லோடு ஆட்டோவும், எதிரே வந்த மாருதி ஷிப்ட் காரும் மோதிக் கொண்டது.இதில், ஆட்டோவில் பயணம் செய்த பாபு, ஓட்டுனர் பாபு ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ