மேலும் செய்திகள்
தொழிற்சாலை பஸ் மோதி ஊர்காவல்படை காவலர் காயம்
16-Oct-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 31. ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 1ம் தேதி இரவு தன் நண்பர்களான ஆகாஷ், 24, பிராங்களின், 23, பிரசாந், ராகுல் ஆகியோருடன் ஆயில் மில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நால்வரும் சேர்ந்து ஜானை ஆபாசமா பேசி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ஜான் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜான் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் ஆகாஷ், பிராங்களின், பிரசாந்த், ராகுல் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Oct-2024