உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை மூன்று சிறுவர்கள் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை மூன்று சிறுவர்கள் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே, ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே வயதுடைய பள்ளி தோழனும், 13 மற்றும் 11 வயதுடைய இரு நண்பர்களும் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அப்போது, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, மூன்று சிறுவர்கள் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை