முழு கொள்ளளவை எட்டிய செருக்கனுார் ஏரி
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், கடந்த ஒரு மாதமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை ஏரி நிரம்பியதால், அதன் உபரிநீர் வெளியேறி சோளிங்கர் ஏரிக்கு வந்தது. அந்த ஏரியும் நிரம்பியதால், நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருத்தணி ஒன்றியம் வழியாக செல்லும் நந்தியாற்றில், செருக்கனுார் - சாமந்திபுரம் இடையே தடுப்பணை கட்டியதால், தண்ணீர் செருக்கனுார் ஏரிக்கு சென்றது. தற்போது, செருக்கனுார் பெரிய ஏரியும் முழு கொள்ளளவை எட்டியதால், செருக்கனுார் சித்தேரிக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.