உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சிப்காட் தொழிற்சாலைகள்

கும்மிடியில் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சிப்காட் தொழிற்சாலைகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது நம்பிக்கையின்றி, கனமழையை எதிர்கொள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சீராக வடிந்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை. இதனால், மிக கனமழை பெய்யும் நேரங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குள் வெள்ளம் புகுந்து, உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால், தொழிற்சாலை நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன. தற்போது, வங்க கடலில் உருவான 'மோந்தா' புயலால், தமிழக வடகோடி பகுதிகளான கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சிப்காட் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால், கனமழையை எதிர்கொள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர்.குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், மழை வெள்ளம் வரும் வழிகளை மணல் மூட்டைகளால் அடைத்து வருகின்றனர். அதையும் மீறி வெள்ளம் சூழும் பட்சத்தில், தண்ணீர் இறைக்கும் மோட்டார்களையும் தயாராக வைத்துள்ளனர். சிப்காட் வளாகத்தை மழை வெள்ளம் சூழும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி