மேலும் செய்திகள்
இன்று இனிதாக...(10.04.2025) திருவள்ளூர்
10-Apr-2025
திருவள்ளூர்:வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் மே 2ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம், வரும் மே 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.10 நாள் உத்சவ விவரம்:நாள் உத்சவம்மே 2 - காலை 5:00 மணி கொடியேற்றம், காலை 6:30 மணி தங்க சப்பரம்-, இரவு 7:00 மணி சிம்ம வாகனம்மே 3 காலை 5:00 மணி ஹம்ச வாகனம், இரவு 7:00 மணி சூரிய பிரபை- மே4 காலை 4:00 மணி கருட சேவை, கோபுர தரிசனம்-, காலை 6:00 மணி திருவீதி புறப்பாடு- , இரவு 7:30 மணி ஹனுமந்த வாகனம்- மே5 காலை 5:00 மணி சேஷ வாகனம்-, இரவு 7:00 மணி சந்திரபிரபைமே 6 காலை 4:00 மணி நாச்சியார் திருக்கோலம், இரவு 7:00 மணி யாளி வாகனம்மே 7 காலை 5:00 மணி வேணுகோபாலன் திருக்கோலம், சூர்ணாபிஷேகம்-, காலை 6:00 மணி வெள்ளி சப்பரம், இரவு 7:00 மணி யானை வாகனம் மே 8 காலை 7:30 மணி தேரோட்டம், இரவு 9:30 மணி கோவிலுக்கு எழுந்தருளல் மே 9 காலை 9:30 மணி திருப்பாதம் சாடி திருமஞ்சனம்-, இரவு 7:30 மணி குதிரை வாகனம்மே 10 காலை 4:00 மணி ஆள்மேல் பல்லக்கு, காலை 10:30 மணி தீர்த்தவாரி, இரவு 7:00 மணி விஜயகோடி விமானம்- மே 11 காலை 10:30 மணி த்வாதச ஆராதனம், இரவு 9:00 மணி கண்ணாடி பல்லக்கு-, இரவு 11:30 மணி த்வஜ அவரோஹணம் கொடியிறக்கம்
10-Apr-2025