உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகளிர் குழு உணவகங்களில் கலெக்டர் திடீர் சோதனை

மகளிர் குழு உணவகங்களில் கலெக்டர் திடீர் சோதனை

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் மூன்று உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, காலையில் டீ, காபி, டிபன் வகைகள், மதியம் சாப்பாடு, மாலையில் வடை உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஆவின் பாலகமும் செயல்படுகிறது.இந்நிலையில், கடைகளின் உணவு தரம் குறித்து, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையிட்டார். உணவு தரங்கள் குறித்து, உணவகங்கள் நடத்தும் மகளிர் குழுவினரிடம் கேட்டறிந்து, தரமான உணவு சமைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்