உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்வு கூடங்களில் அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

தேர்வு கூடங்களில் அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு கூடங்களில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,. பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்வு முன்னேற்பாடு மற்றும் தேர்வு கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:தேர்வு நடைபெறும் மையங்களில் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன், தயார் நிலையில் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும். அரசு பொதுத் தேர்வு எதிர்கொள்ள மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துறை, தீயணைப்பு, மின்சாரம், போக்குவரத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை