| ADDED : பிப் 13, 2024 06:24 AM
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்துதிருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்கு இருளர் காலனி செல்லும் சாலையில், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.ஒரு கம்பத்திற்கும் மற்றொரு கம்பத்திற்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் மின்கம்பி தாழ்வாக செல்கிறது.காற்று வீசினால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வி.பாலன், ராஜபத்மாபுரம்.அபாய நிலையில் மின் கம்பம்கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் உள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இந்த வங்கியை மணவாளநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வங்கி அருகே உள்ள ஏ.டி.எம்., முன்பு மின் கம்பம் ஒன்று உள்ளது. இதன் அடிப்பகுதி சேதடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. அருகிலேயே துணை மின்நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் இருந்தும் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, வங்கிக்கு வரும் பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்.- எஸ்.ஆனந்தன், மணவாள நகர்.பேருந்து வழித்தடம்மாற்ற வேண்டும்கும்மிடிப்பூண்டியில் இருந்து ஈகுவார்பாளையம் வழியாக மாதர்பாக்கம் வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், நாகராஜகண்டிகை கிராமத்தில் இருந்து காட்டு வழிச்சாலையாக ஈகுவார்பாளையம் இயக்கப்படுகின்றன. காட்டு வழி பாதையை தவிர்த்து கிராம மக்கள் பயன் பெறும் வகையில், கோங்கல், குமாரநாயக்கன்பேட்டை, மேல்பாக்கம் கிராமங்கள் வழியாக இயக்க வேண்டும். அதன் மூலம், மேற்கண்ட கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், இருபால் தொழிலாளர்கள், விவசாயிகள் பயனடைவர். போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--என்.சிவா, ஈகுவார்பாளையம்.மின் விளக்குகள் அமைக்கப்படுமா?திருத்தணி ரயில் நிலையத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்னை மற்றும் திருப்பதி மார்கத்திற்கு மின்சாரம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்கின்றனர். பெரும்பாலான பயணியர் திருத்தணி காந்தி சாலை வழியாக தீபாத்தியம்மன் கோவில் தெரு மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே செல்லும் சாலை வழியாக ரயில் நிலையத்திற்கு செல்கின்றனர்.இந்நிலையில், மேற்கண்ட இரு வழிகளிலும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.--- அ.முனுசாமி, திருத்தணி.