உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாரண சாரணியர் பயிற்சி முகாம் நிறைவு விழா

சாரண சாரணியர் பயிற்சி முகாம் நிறைவு விழா

திருத்தணி:திருத்தணி தளபதி கே. விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி சாரண மாவட்டம், சாரண - சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் கடந்த 19ம் தேதி துவங்கியது.திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுகானந்தம், சிவதாஸ், தளபதி கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். நிறைவு விழா நேற்று முன்தினம் பள்ளியில் நடந்தது. இதில் தளபதி கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி, தனியார் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். முகாமில், 22 சாரண ஆசிரியர்கள், 12 சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்று சாரண அடிப்படை பயிற்சி பெற்றனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் திருத்தணி சாரண மாவட்ட செயலர்.ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி