உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறிமுதல் வாகனங்கள் வரும் 7ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 7ம் தேதி ஏலம்

திருவள்ளூர்;ரேஷன் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள், அக்., 7ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட ரேஷன் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால், பொது வினியோக திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 51 வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் பொருட்களை கடத்தி சென்ற குற்றத்திற்காக, அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தி, வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. மேலும், இந்த வாகனங்களுக்கு இதுவரை, யாரும் உரிமை கோரவில்லை. எனவே, பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் கோர விரும்புவோர், அக்., 7ம் தேதி காவல் ஆய்வாளர், ரேஷன் பொருள் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ