மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலி
புல்லரம்பாக்கம்:புல்லரம்பாக்கம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து, ஒப்பந்த ஊழியர் பலியானார். திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 36. மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிகிறார். இவர், கடந்த 3ம் தேதி மதியம் கல்யாணகுப்பம் பகுதியில், சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்கம்பியை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.