உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

திருத்தணி:திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், 65; இவரது மனைவி கன்னியம்மாள், 60.; இருவரும் நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் கே.ஜி.கண்டிகை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.பின் இரவு, இருவரும் அதே இரு வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, தலையாறிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே காட்டுபன்றிகள் வந்தன.பன்றிகள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டதில், இருவரும் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி அளித்து சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை