உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்

ஆரணி ஆற்று பாலத்தில் இரும்பு சட்டங்கள் சேதம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், கடந்த 2017ம் ஆண்டு 27.8 கோடி ரூபாய் மதிப்பிட்டில், மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ், 'டெண்டர்' விடப்பட்டு, 2021ம் ஆண்டு பணிகள் முடித்து, தற்போது பயன்பாட்டில் உள்ளது.இந்த பாலம், 450 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும், பாதசாரிகள் நடந்து செல்ல 1.5 மீட்டர் பாதை உள்ளது.இந்த பாலத்தின் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர். தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இந்த பாலத்தை கடந்து ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.இந்த பாலத்தின் குறிப்பிட்ட இடைவெளியில், இரும்பு சட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்த பாலத்தில் இரண்டு இடங்களில் இரும்பு சட்டம் சேதமடைந்து உள்ளது.தொடர்ந்து, இப்பாலத்தில் செல்லும் வாகனங்களால், இரும்பு சட்டம் சேதமடைந்து, பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே, பாலத்தின் இரும்பு சட்டங்களை சீரமைக்க, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை