உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிங்கிலிமேடு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 சிங்கிலிமேடு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி: வடக்குப்பட்டு - சிங்கிலிமேடு இடையேயான சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் இருந்து, சிங்கிலிமேடு வழியாக தடப்பெரும்பாக்கம் செல்லும் சாலை முழுதும், பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இக்கிராமங்களில் இருந்து, பொன்னேரி அரசு பள்ளிகளில் படிக்க செல்லும் மாணவர்கள், சைக்கிள்களை சிரமத்துடன் ஓட்டிச் செல்கின்றனர். வேன், லாரி உள்ளிட்டவை செல்லும்போது, அப்பகுதி முழுதும் புழுதி பறக்கிறது. எனவே, மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ