உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனம் நிறுத்துவதை தடுக்க அமைத்த இரும்பு தடுப்பு சேதம்

வாகனம் நிறுத்துவதை தடுக்க அமைத்த இரும்பு தடுப்பு சேதம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கல்லுாரிக்கு செல்ல திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில், டோல்கேட் - ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பில் இருந்து, இடதுபுறம் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கல்லுாரி செல்லும் சாலை அகலமாக அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையின் இருபுறத்தையும் பசுமையாக்கும் முயற்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலையை ஒட்டி பகல், இரவு நேரங்களில், தனியார் நிறுவன வாகனங்கள், லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இரவு நேரத்தில் வாகனங்களின் மறைவில், சிலர் மது அருந்தி வருகின்றனர். இதனால், கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் அச்சமடைந்து வருகின்றனர். டோ ல்கேட்டில் இருந்து கல்லுாரிக்கு செல்லும் நுழைவாயில் முன், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தடுப்பு அமைத்ததை அறியாமல் லாரி ஒன்று நுழைய முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதியது. இதன் காரணமாக, இரும்பு தடுப்பு மற்றும் சிமென்ட் துாண் சேதமடைந்தது. நேற்று, பொதுப்பணி துறை ஊழியர்கள் இரும்பு தடுப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை