மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக கட்டடம் திம்மாபுரத்தில் அமையுமா?
12-Nov-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் அரசு பள்ளி வளாகத்தில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்த நிலையில், கட்டத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.மழைக்காலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வரும் கிராம மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.எனவே, சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Nov-2024