உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரிக்கரை அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் இல்லாததால் அபாயம்

ஏரிக்கரை அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் இல்லாததால் அபாயம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சானுார் மல்லாவரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தெற்கில் உள்ள ஏரிக்கரை எதிரே அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் சானுார் மல்லாவரம், சானுார் மல்லாவரம் காலனி, நீலோத்பாலாபுரம், பத்மாபுரம், சின்ன சானுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளிக்கு, தற்போது வரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் வெளிநபர்கள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர்.மேலும், மாணவர்களும் அருகில் உள்ள ஏரிக்கரைக்கு செல்லும் அபாயமும் உள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை