உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொலை மிரட்டல் இருவர் தலைமறைவு

கொலை மிரட்டல் இருவர் தலைமறைவு

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்த சுப்ரமணி என்பவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த சோக்கி மற்றும் அன்பு ஆகியோர், கடந்த 13ம் தேதி தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட சுப்ரமணியின் மகன் ரமேஷ், 42, என்பவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ரமேஷ், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ரமேஷின் மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரது உறவினர் சாவித்திரிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை