உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க முடிவு

திருவள்ளூரில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க முடிவு

திருவள்ளூர்,:மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், விவசாயிகளின் விபரம், புவிசார் குறியீடு செய்த பதிவு, நில உடமை வாரியாக மின்னணு பயிர் சாகுபடி விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன் வாயிலாக அனைத்துத் துறை பயன்களையும் மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் நில உடமை மற்றும் சுய விபரங்களை தங்களது கிராமங்களில் தரவு சேகரிக்கும் முகாம்கள் நடைபெறும் நாட்களில் நில ஆவணம், ஆதார் மற்றும் இதர ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை