உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆற்றங்கரையில் அழுகிய சடலம் கண்டெடுப்பு

 ஆற்றங்கரையில் அழுகிய சடலம் கண்டெடுப்பு

பொதட்டூர்பேட்டை: கொசஸ்தலை ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதட்டூர்பேட்டை அடுத்த சொரக்காய்பேட்டையில் கொசஸ்தலை ஆற்றில், நேற்று மாலை சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அழுகிய ஆண் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர், சமீபத்தில் பெய்த பருவ மழையின் போது ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ