மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை தலைமையாசிரியர் போக்சோவில் கைது
20-Nov-2024
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, அந்த பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் படி, தலைமையாசிரியர் செங்கல்வராயன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நேற்று பள்ளிப்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலர் சரவணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
20-Nov-2024