உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தினமலர் செய்தி எதிரொலி :பசுமை பூங்காவில் நுாலகம் திறப்பு

தினமலர் செய்தி எதிரொலி :பசுமை பூங்காவில் நுாலகம் திறப்பு

ஆவடி:ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வணிக வளாக கட்டடத்தின் முதல் தளத்தில், கடந்த 1995 முதல் மாவட்ட கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. இந்த நுாலகத்தில் காமராஜர் நகர், ஜெ.பி., எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு 62,000 புத்தகங்கள் உள்ளன. இந்த கட்டடம் 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், பாழடைந்த நிலையில் காட்சியளித்தது. நுாலகத்தில் பெண் நுாலகர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, இருக்கை உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, கடந்த 30 ஆண்டுகளாக இடவசதி இல்லாமல் அவதியடைந்த ஆவடி கிளை நுாலகம், பருத்திப்பட்டு, பசுமை பூங்காவில் உள்ள கட்டடத்தில் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அமைச்சர் நாசர், நுாலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஆவடி மேயர் உதயகுமார், மாவட்ட நுாலகர் கவிதா மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை