உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்கள் திறனை அதிகரிக்க பயிற்சி நிறுவனங்களுடன் விவாதம்

மாணவர்கள் திறனை அதிகரிக்க பயிற்சி நிறுவனங்களுடன் விவாதம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று நடந்த திறன் இடைவெளி பகுப்பாய்வு கூட்டத்தில், தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, மாணவர்களின் திறன்களை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, திறன் இடைவெளி பகுப்பாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப், ஓய்வு பெற்ற மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட திறன் பயிற்சி நிலைய உதவி இயக்குநர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி முதல்வர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தொழில் நிறுவன பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆலோசனை பெறப் பட்டது. பின், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன்களுக்கு ஏற்ப, மாவட்ட திறன் பயிற்சி நிலையம், அரசு தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகளில், மாணவர்களின் திறன்களை அதிகரிப்பது குறித்து விவாதித்து, ஆலோசனை வழங்கப் பட்டது. தொழில் நிறுவனங்கள், தாங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் தொடர்பான அறிக்கையை, தங்கள் நிறுவனத்துடன் கலந்தாலோசனை செய்து, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை