உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 50 பழங்குடியின மாணவியருக்கு சைக்கிள் வழங்கல்

50 பழங்குடியின மாணவியருக்கு சைக்கிள் வழங்கல்

திருத்தணி : திருத்தணி அடுத்த, தாழவேடு இருளர் காலனியில், திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில், உள்ள 10 இருளர் காலனியைச் சேர்ந்த, 50 மாணவியருக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.திட்ட இயக்குனர் சுமதி தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா வரவேற்றார்.இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா பங்கேற்று, 50 மாணவியருக்கு சைக்கிள், தாழவேடு இருளர் காலனிக்கு, 10 சோலார் விளக்குகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் சிவபிரகாசம், தன்னார்வலர் மணிகண்டன், திருத்தணி, திருவாலங்காடு திட்ட மேலாளர்கள், கருத்தாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !