மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
3 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
3 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
5 minutes ago
சென்னை: கும்மிடிப்பூண்டியில் உள்ள பெரிய ஓபுளாபுரம் ஏரி மற்றும் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனுவுக்கு, மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா, நாகராஜகண்டிகையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு: பெரிய ஓபுளாபுரம், பாப்பாங்குப்பம் கிராமங்களில் உள்ள பெரிய ஓபுளாபுரம் ஏரி, கால்வாய்களை தனிநபர்கள் மற்றும் 'எம்.டி.சி., இந்தியா, ஓ.பி.ஜி., பவர் ஜெனரேஷன்' போன்ற நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக, பருவமழை காலங்களில் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்து விடுகிறது. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படை உரிமை என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, கடந்தாண்டு ஜூனில் அனுப்பிய மனுவை பரிசீலித்து, நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
3 minutes ago
3 minutes ago
5 minutes ago