உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம்

பழுதடைந்த கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம்

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 33 ஊராட்சிகளில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளின் தலைமை அலுவலகமான வட்டார கல்வி அலுவலகம், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தை ஒட்டி செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அலுவலக கட்டடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. வட்டார கல்வி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் இந்த அலுவலகத்தில் ஆவணங்களை பாதுகாக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர். போதிய இடவசதி இல்லாத இந்த அலுவலகத்திற்கு, பல்வேறு முக்கிய பணிகள் காரணமாக வந்து செல்லும் ஆசிரியர்கள், காத்திருக்கவும் போதிய இடவசதி இன்றி அவதிப்படுகின்றனர். ஒன்றியத்தின் முக்கிய அலுவலமான இந்த வட்டார கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ