உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் கூடாது மருத்துவர் அறிவுரை

 கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் கூடாது மருத்துவர் அறிவுரை

திருவாலங்காடு: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை, தைராய்டு பாதிப்புகளை அலட்சியப்படுத்த கூடாது என, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாநில சுகாதாரத்துறையின் கீழ், தாய் - சேய் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, கர்ப்பிணியரின் அனைத்து செயல்பாடுகளும், 'பிக்மி' பதிவுகள் வழியாக கண்காணிக்கப்படுகிறது. கர்ப்பிணியர், பிரசவத்திற்கு 180 நாட்கள் முன்பும், 180 நாட்கள் பின்னும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ், செவிலியர்கள் குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மொபைல் போன் மூலம் கர்ப்பிணியரின் உடல்நலம் குறித்து விசாரிக்கின்றனர். தற்போது, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த காலங்களை காட்டிலும், அதிகளவில் சர்க்கரை, தைராய்டு கோளாறுகளால் கர்ப்பிணியர் பாதிக்கப்படுவதாக, களப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தாய் - சேய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், கர்ப்பிணியருக்கு மூன்று முறை ஜி.சி.டி., எனும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், சர்க்கரை, தைராய்டு பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், 'ஹை ரிஸ்க்' பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கூறியதாவது: வாழ்வியல் மாற்றங்கள், உடல் பருமன், சுற்றுப்புற சூழல் காரணமாக கர்ப்பிணியருக்கு சர்க்கரை, தைராய்டு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சர்க்கரை, தைராய்டு இருப்பின், கட்டாயம் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி மருந்து, உணவு முறையை பின்பற்ற வேண்டும். அலட்சியமாக இருந்தால், பிரசவ நேரத்தில் சிக்கலும், குழந்தைகளுக்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ