உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பறிமுதல் ஓட்டுநருக்கு சிறை

குட்கா பறிமுதல் ஓட்டுநருக்கு சிறை

புல்லரம்பாக்கம்:புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 'டாடா மேஜிக்' சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், 141 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 42,000 ரூபாய்.இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், 38, என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதன்பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் தினேஷ்குமாரை ஆஜர்படுத்திய போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை