உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை ஆசாமி கார் மோதி பலி

போதை ஆசாமி கார் மோதி பலி

பொன்னேரி, பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 55; கூலித்தொழிலாளி. சாலையோரங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதன் வாயிலாக வரும் பணத்தை, குடும்ப செலவினங்களுக்கு பயன்படுத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு, தடப்பெரும்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே, போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தார். அதேசமயம், வாகனம் பழுது பார்க்க வந்த 'சுசூகி ரிட்ஸ்' கார் ஒன்று, பின்னோக்கி இயக்கிய போது, போதையில் இருந்த ரவி மீது ஏறியது.இதில், ரவி பலத்த காயமடைந்ததை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய காரில், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவல் அறிந்த பொன்னேரி போலீசார், ரவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கவனக்குறைவாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பொன்னேரியைச் சேர்ந்த மணிகண்டன், 25, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ