உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்

பொதட்டூர்பேட்டை: பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி படுகாயமடைந்தார். பொதட்டூர்பேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் சுசீலா, 65. இவர், நேற்று காலை வீட்டில் இருந்த போது, அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதில், சுசீலா படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !