உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் -- ஜனப்பன்சத்திரம் நெடுஞ்சாலையில் உள்ளது வெங்கல் ஊராட்சி. இங்கு, 5,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்வது. இங்கிருந்து மெய்யூர், கரகம்பாக்கம், சீத்தஞ்சேரி செல்பவர்கள், அங்குள்ள போலீஸ் நிலையம் அருகே இடதுபுறம் செல்லும் சாலை வழியே செல்ல வேண்டும்.இச்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கானோர் சென்று வரும் நிலையில், இச்சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இது, எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விபத்து ஏற்படும் முன் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ