உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் விபத்தை தவிர்க்க மின் வாரியம் ஆலோசனை

மின் விபத்தை தவிர்க்க மின் வாரியம் ஆலோசனை

திருவள்ளூர்: காற்று, மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, மின்வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின் பகிர்வு பெட்டி அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பி அறுந்து கிடந்தால், அதை தொடாமல், உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகிலுள்ள கிளைகளை, மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் துணைமின் நிலையங்கள் போன்ற இடங்களில் நிற்க கூடாது. டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மொபைல்போன் 'சார்ஜில்' இருக்கும் போது பயன்படுத்த வேண்டாம். மக்கள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, மின் பாதிப்பு ஏற்படாமல் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின் புகார் குறித்து, 94987 94987 என்ற 24 மணி நேர புகார் மையத்திற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை