உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு

 கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு

திருமழிசை: திருமழிசை அடுத்த கூடப்பாக்கத்தில் புதிய மின்வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகம் நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. திருமழிசை அடுத்த கூடப்பாக்கம், வெள்ளவேடு, புதுச்சத்திரம், நேமம் உட்பட பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால், பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, புதிய மின்வாரிய அலுவலகம் கேட்டு, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், புதிதாக மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் கூடப்பாக்கம், நேமம், வெள்ளவேடு, புதுச்சத்திரம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 8,000 வீடுகள் பயன்பெறும் என, மின்வாரிய உதவி மேற்பார்வையாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ