உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காலை சிற்றுண்டி கூடத்திற்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

காலை சிற்றுண்டி கூடத்திற்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

திருவாலங்காடு:பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாராயணபுரம் கிராமம். இங்கு அரசு துவக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இம்மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தயாரித்து வழங்க பள்ளி வளாகத்தில் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூடத்திற்கு மின்துறையிடம் அனுமதி பெற்று மின்சாரம் பயன்படுத்தாமல் கொக்கி போட்டு திருடப்பட்டு உள்ளது.அரசால் நடத்தப்படும் சிற்றுண்டி கூடமே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வேலியே பயிரை மேய்வது போல உள்ளதாக கூறுகின்றனர்.எனவே, இதை தடுக்கவும், மின்துறையிடம் அனுமதி பெற்று, காலை சிற்றுண்டி கூடத்திற்கான மின்சாரம் பயன்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை