உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்

கும்மிடிப்பூண்டி:ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, பழைய தபால் தெருவுடன் இணைக்க வேண்டும் என ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலை அமைந்துள்ளது. தெற்கு பகுதியில், அந்த சாலை முடிவடையும் இடத்தில் இருந்து, நேராக சென்றால், 200 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு உள்ளது.இடைப்பட்ட பகுதி முழுதும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலமாகும். இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, அவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர்.மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெருவில், தற்போது ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசலில், ஒரு கி.மீ., துாரம், சுற்றி வர வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர்.ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, தபால் தெருவுடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை