உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூத்தோர் உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து- - ஆஸ்திரேலியா அணி

மூத்தோர் உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து- - ஆஸ்திரேலியா அணி

சென்னை,:ஐ.எம்.சி., எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆதரவோடு, வெடரன் கிரிக்கெட் ஆப் இந்தியா அமைப்பு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டாவது உலகக் கோப்பை போட்டியை, சென்னையில் நடத்தி வருகின்றன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற போட்டி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, இலங்கையை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதை, இங்கிலாந்து வீரர் ஜிம் பிலிப்ஸ் வென்றார்.மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, 45 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 142 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 41.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து, 143 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தது.போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், இன்று நடக்கும் இறுதி போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ