சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவாக்கம்
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமைகளில் 500 பேருக்கும், மற்ற நாட்களில், 100 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.இக்கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று முதல் செவ்வாய்க்கிழமைகளில் 2,000 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 500 பேருக்கும், மற்ற நாட்களில் 100 பேருக்கும் வடை, பாயசத்துடன் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.இதற்கான துவக்க விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. வேலுார் மண்டல துணை ஆணையர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சிவஞானம், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், விரிவாக்கம் செய்யப்பட்ட அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார்.