உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரி கலங்கலை சீரமைக்க எதிர்பார்ப்பு

ஏரி கலங்கலை சீரமைக்க எதிர்பார்ப்பு

சோழவரம்:சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், 100ஏக்கர் பரப்பில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கலங்கல் பகுதியானது, கும்மனுார் செல்லும் சாலை அருகே இருக்கிறது.கலங்கல் பகுதியைவிட சாலை மட்டம் உயரமாக இருப்பதால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற வழியின்றி, கிராமங்களுக்கு புகுந்துவிடுகிறது. கடந்த, மாதம் பெய்த கனமழையின்போதும், ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறாமல், பூதுார் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளையும், அரசு பள்ளியையும் சூழ்ந்தது.இதனால் கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கலங்கல் பகுதியின் அருகே, சாலை மட்டத்தை குறைத்து, அங்கு சிறுபாலம் அமைத்தால், மழைக்காலங்களில் ஏரியின் உபரிநீர் எளிதாக வெளியேறும்.இது தொடர்பாக பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினரிடம் கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அடுத்து வரும் மழைக்காலத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி