தொழிற்சாலை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
மணவாள நகர்:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா சிங்கபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன், 27. இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, நண்பர்களுடன் மணவாள நகர் கே.கே., நகர் பகுதியில் தங்கி, வயலுார் பகுதியில் உள்ள யங்ஷன் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சலையில் பணிபுரிந்து வந்தார்.கடந்த 28ம் தேதி காலை, இவரது நண்பர்கள் பணிக்கு சென்று விட்டனர். இரவு பணி என்பதால், குமரேசன் மட்டும் அறையில் இருந்துள்ளார்.பின், அன்று மாலை, நண்பர்கள் பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, கதவு பூட்டி கிடந்தது. திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் மின்விசிறியில் துாக்கிட்டு, குமரேசன் இறந்து கிடந்தார்.தகவலறிந்த மணவாள நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி, திருவளளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, இவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.