உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் விபத்து என தவறான தகவல் சிறுபுழல் பேட்டையில் பரபரப்பு

அரசு பஸ் விபத்து என தவறான தகவல் சிறுபுழல் பேட்டையில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து என 108 எண்ணிற்கு கிடைத்த தவறான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை கிராமத்தில், அரசு பேருந்து கவிழ்ந்து ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாக, நேற்று முன்தினம், இரவு, 108 எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது. அவசர தகலை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த, ஐந்து ஆம்புலன்ஸ்கள் சிறுபுழல்பேட்டை கிராமத்திற்கு சென்றன. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலைய வாகனமும் சிறுபுழல்பேட்டை சென்றது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் கிராமத்தை சூழ்ந்ததால், கிராம மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. அழைப்பு வந்த மொபைல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் கிராம மக்களிடம் விசாரித்தனர். அதில், 108 அழைப்புக்கு வந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனமும் திரும்பி சென்றன தவறான தகவல் அளித்த நபர் யார் என்பது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி