உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் விரக்தி

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் விரக்தி

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே, வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் நெல் கொள் முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், புதுச்சேரி, நந்திமங்களம், தாராட்சி, பேரண்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த நெல்லை அரசிடம் ஒப்படைத்து பணம் பெற்று வருகின்றனர். இங்கு நான்கு குழுக்களாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. டிராக்டர், லாரிகளில் நெல் மூட்டைகளை எடுத்து வந்து விவசாயிகள் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. சமீப நாட்களாக திடீரென மழை பெய்து வருகிறது. இதுபோன்ற சமயங்களில் தார்பாய் போட்டு மூடாமல் எடுத்து வரும் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைத்து விடுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள் முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை